செய்திகள்

வேலையற்ற இளைஞர்களுக்கு கடவை காப்பாளர் நியமனம் வழங்கப்படவேண்டும் – சிறீதரன்

நாட்டில் பல இடங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பலரது உயிர்கள் தொடர்ந்தும் காவு கொள்ளப்படுகின்ற நிலையில், வடமாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ரயில் காப்பாளர் நியமனம் வழங்கப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய (28.06.2019) பாராளுமன்ற அமர்வில் அவர் இதனை தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  ”நாட்டில் பல இடங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பலரது உயிர்கள்  காவுகொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன.

எனவே இது தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவது முக்கியமானதாகும். 

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ரயில் காப்பாளர் நியமனம் வழங்கப்படும் பட்சத்தில் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வை எட்ட முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button