செய்திகள்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பெற்றோல் இல்லை -பறிபோனது 12 வயது சிறுவனின் உயிர்

திடீர் சுகயீனம் காரணமாக அவதிப்பட்ட 12 வயது சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்றைய தினம் கல்பிட்டியில் பதிவாகியுள்ளது.
சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஒன்றரை மணி நேரம் வாகனம் தேடியும் பெற்றோல் இல்லாததால் வாகனத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் இறுதியில் சிறுவனை சைக்கிளில் வைத்தே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் சிறுவனை தாமதாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு முன் சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் சிறுவனை காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியசாலை தரப்பு கூறியதாக பெற்றோர் மேலும் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.