சமூகம்

வைத்தியசாலையை ஆக்கிரமித்துள்ள மூட்டைப்பூச்சிகள் :மக்கள் கவலை

தம்புள்ளை மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உள்ள வாட்டில் மூட்டைப்பூச்சியின் ஆக்கிரமிப்பு காரணமாக விடுதியில் தங்கியிருக்கும் நோயாளிகள் இரவு வேளைகளில் நித்தரையின்றி இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒப்ரேஸன் பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியிலும் இலக்கம் 7 மற்றும் இலக்கம் 8 விடுதியிலும் மூட்டைப்பூச்சிகள் மிகவும் தீவிரமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி வைத்தியர்களும் தாதிமார்களும் தங்கியிருக்கும் அறைகளிலும் மூட்டைப்பூச்சிகள் உள்ளது.

இதனால் ஒப்ரேசன் பிரிவில் நோயாளிகளை சிகிச்சைக்குட்படுத்தும் போது நோயாளிகள் மட்டுமின்றி தாதி மற்றும் வைத்தியர்களும் சௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

Related Articles

45 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button