...
செய்திகள்

வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நோயாளிகள் பாதிப்பு  நுவரெலியாவில் 

இன்று காலை இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் போராட்டத்தினால் மாவட்ட பொது  பொது வைத்திசாலையிலும் ,நகரில் உள்ள சில தனியார் வைத்தியசாலையிலும் நிருத்ததில்  வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன முற்றாகத் தடைப்படுவதுடன், நுவரெலியா மாவட்ட  பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமைபோல் இயங்குகிறது.

எங்களின் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என நுவரெலியா ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை சேவைகள் முற்றிலும்  ஸ்தம்பித்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Related Articles

Back to top button


Thubinail image
Screen