மலையகம்

ஶ்ரீபாத கல்வியல் கல்லூரிக்குள் இன்று நடப்பது என்ன ?

பத்தனை ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் நடந்த சம்பங்கள் தொடர்பாக அங்குள்ள ஆசிரிய மாணவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அந்த பிரச்சனையை மாணவர்கள் மீது திணித்துவிட்டு வேறொரு பிரச்னையாக மாற்றிவிட சம்பத்தப்பட்ட தரப்பு முயல்வதாக மாணவர்களால் தெரிவிக்கப்டுகின்றது.

இன்று மாணவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய கல்வி உயர் அதிகாரியான பி .எச் பண்டார இன்று மாலை 04மணிக்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இடமாற்றம் தொடர்பிலும் அறிவிப்பதாகவும் தெரிவித்ருக்கின்றார்.

அங்கு நீண்டகாலமாக பணிப்புரியும் பதிவாளர் ஒரு சர்வாதிகாரியாக இயங்குவதாகவும் தெரிவிக்கப்டுகிறன்றது.மேலும் அவர் இருக்கின்ற காலப்பகுதியில் என்ன என்ன ஊழல்கள் கல்லூரிக்குள் இடம்பெற்றன என்பன தொடர்பிலும் இனிவரும் காலங்களில் தகவல்கள வெளியாகலாம் என்றும் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தொடர்ந்தும் அந்த பதிவாளர் அங்கு இயங்குவாரென்றால் நிச்சயம் குறித்த சம்பங்களை வெளியில் கொண்டுவந்த ஆசிரிய மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர் செயல்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button