அரசியல்செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  16 தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.
புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று மாலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்களின் விபரங்கள் பின்வருமாறு. 

குருணாகல் மாவட்டம் 
குளியாப்பிட்டி தொகுதி அமைப்பாளர் – திரு. தர்மசிறி தசநாயக்க 
பிங்கிரிய தொகுதி அமைப்பாளர் – திரு. அதுல விஜேசிங்ஹ 
குருணாகல் மாவட்ட அமைப்பாளர் – திரு. சம்பத் சுசந்த கெடவலகெதர 

அம்பாறை மாவட்டம் 
அம்பாறை தொகுதி அமைப்பாளர் – திருமதி. ஸ்ரீயானி விஜேவிக்ரம 
கல்முனை தொகுதி அமைப்பாளர் – சட்டத்தரணி யூ.எம்.நிஸார் 
பொத்துவில் தொகுதி அமைப்பாளர் – திரு. ஏ.எம். அப்துல் மஜீத் 
சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் – திரு. ஏ.பி. அச்சு மொஹம்மட் 

புத்தளம் மாவட்ட அமைப்பாளர் – சட்டத்தரணி சாந்த ஹேரத் 
கொழும்பு கிழக்கு அமைப்பாளர் – திரு. பிரதீப் ஜயவர்தன 
கம்பஹா மாவட்ட அமைப்பாளர் – திரு. இந்திக ராஜபக்ஷ 
இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் – திரு. குடாபண்டார இலுக்பிடிய 
கரந்தெனிய தொகுதி இணை அமைப்பாளர்- திரு. ரம்ய ஸ்ரீ விஜேதுங்க 
திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்கள்- திரு. அக்ரம் மற்றும் திரு. ஜவாஹிர் 
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்கள் – திருமதி. மீனாதர்ஷனி மற்றும் திரு. சுதர்ஷன்

Related Articles

Back to top button
image download