செய்திகள்

ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அழைப்பு.!

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை நாளை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிகளை நாளை மறுதினம் கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு கூடவுள்ளது. கோப் குழுவுக்கு மேலதிகமாக பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் , அமைச்சரவை ஆலோசணைக்குழுக்களும் இவ்வார பாராளுமன்ற அமர்வில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button