செய்திகள்

ஷானி அபேசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த இருவரும் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் உள்ளிட்ட மூவரும் போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வருடம் ஜுலை 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, கம்பஹா மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய ஷானி அபேசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த விளக்கமறியல் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நிதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை தலா 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ள நீதிமன்றம் அவர்களின் கடவுச் சீட்டுக்களை மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button