செய்திகள்

ஷிகர் தவானின் தலைமையில் இலங்கை வருகிறது இந்தியா

(ராகவ்)

இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் தலைமையிலான குழாத்தில் புவனேஸ்வர்குமார் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

அண்மைய போட்டிகளில் உபாதைகளை சந்தித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தின் மற்றொரு வீரரான சாய் கிஷோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குழாத்தில் பயிற்சி பந்துவீச்சாளராக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர்களான ப்ரித்வி ஷோ , தேவ்தத் படிக்கல் ,ருத்துராஜ் கெய்க்வாட் ,ராகுல் சஹார்,சேட்டன் சகரியா , இஷான் கிஷான் ஆகியோரும் இந்திய குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதனைத்தவிர சூர்யகுமார் யாதவ் , ப்ரித்தி ஷோ , குர்பால் பாண்டியா ,சஞ்சு சம்சொன் ,நித்திஸ் ரானா,குல்தீப் யாதவ் ,யுஸ்வேந்திர சஹால்,நவ்தீப் சய்னி,மனிஷ் பாண்டி,கிருஸ்ணப்பா கௌதம் ஆகியோரும் இந்திய குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

பெயரிடப்பட்டுள்ள இந்திய குழாம் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் சர்வதேச ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் 16 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இரு அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 21 , 23,மற்றும் 25 ஆம் திகதிகளில் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் யாவும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com