செய்திகள்

ஸ்டார்லின் உட்பட 31 பேர் கைது.!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு பிக்குகளும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை, பொல்துவ சுற்றுவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு முயன்ற வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button