...
செய்திகள்

ஸ்டாலினின் ‘ மீண்டும் மஞ்சப்பை’

தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் பெப்ரவரியில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நூறுசதவீதவெற்றி பெறுவதற்கான திட்டமிடலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதற்கேற்ற வகையில் ஜனவரி 5ஆம்திகதி முதல் தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வாக்காளர்களை கவர்ந்திழுக்கும்அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன. 

சுற்றுச்சூழல்மாசு குறித்து பலரும் பல வடிவங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வர, தமிழக அரசு ஒருபடி மேலே சென்று, ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியிருக்கிறது.இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் மட்டுமல்லாமல், மக்களிடத்திலும் ஆதரவு கிடைத்துவருகிறது. 

இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஸ்டாலினின்உருவம் பொறித்த மஞ்சப்பையில் வழங்கப்படவுள்ளது. ‘மண்ணோடு மக்கும் மஞ்சப்பையை வாங்கி,சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இருப்போம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழியைமுற்றாக தவிர்ப்போம்’என்ற ஸ்டாலினின் விழிப்புணர்வை மக்கள் வரவேற்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

இச்செயற்பாடு அரசியல்ரீதியாகவும் பாரிய விளைவை ஏற்படுத்தும். பகுத்தறிவு கொள்கையை உயர்த்திப் பிடிக்கும்திராவிட கட்சிகள், மஞ்சள் வண்ணத்தை தங்களின் அடையாளமாக ஏற்றுக் கொண்டிருப்பது அல்லதுஆதரவு தெரிவிப்பது அவர்கள் ஆன்மீக நம்பிக்கை அல்லது இறைநம்பிக்கை கொண்ட கொள்கை மீதுநம்பிக்கை வைத்து திசை திரும்பி பயணிக்க தொடங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தப்படுத்தப்படும்என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen