செய்திகள்

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் இரு அதிகாரிகள் பதவி நீக்கம்!

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் விமான நடவடிக்கைகளின் தலைவர் மற்றும் தலைமை விமானி பதவியை வகித்த இரு அதிகாரிகளும் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

விமான நடவடிக்கைத் தலைவர் பிரவீன் வெத்தமுனி மற்றும் தலைமை விமானி சமிந்த டி சொய்சா ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கும் போது சீனாவில் – வுஹானில் சிக்கியிருந்த இலங்கையர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு முக்கிய பங்காற்றியவர் சமிந்த டி சொய்சா ஆவார்.

ஏ 330 இலங்கை விமானத்தில் இணை விமானியாக செல்வதற்கு, விமானியாக தகுதி இல்லாத, விமானம் செலுத்துவதற்குரிய உரிமம் இல்லாத ஒரு நபரை அனுமதித்தமை இந்த அதிகாரிகளுக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று.

கடந்த ஆண்டு டிசம்பர் 15, 18, 19 ஆகிய தினங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தேமிய அபேவிக்ரம, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விபுல குணதிலகவுக்கு இதை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

Related Articles

Back to top button