அரசியல்செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை காலமும் அப்பதவியிலிருந்த எஸ்.பி திசாநாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button