அரசியல்செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க முற்படும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் ?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடாத நிலையில் கட்சி ஆதரவாளர்களை குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு என்ற குழுவினர் நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் விசேட சம்மேள கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே குமார வெல்கம இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய குமார வெல்கம, சந்திக்கா பண்ராநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி காண்பிக்குமாறு தயாசிறி ஜயசேகரவிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் எதிர்பார்க்கப்படும் முடிவு கிடைத்தால் தயாசிறி ஜயசேகரவை காதினால் பிடித்து வெளியில் வீசுவுதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் எனவும், அதற்காகவே சந்திக்கா குமரதுங்கவை நிகழ்வுக்கு அழைத்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது வேறு அரசியில் கட்சி ஒன்று நடத்தும் கூட்டம் ஒன்று அல்ல எனவும் அவ்வாறான கூட்டமாக இருந்திருந்தால் தான் ஒருபோதும் பங்கேற்றிருக்க போவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவருக்கு அல்லது அவருக்கு வாக்களிக்குமாறு தன்னை யாரும் வற்புறுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தேர்தல் களத்தில் இல்லாததன் காரணமாக 34 பேரை கொண்ட வாக்குச்சீட்டில் எவருக்கும் வாக்களிக்கும் உரிமை தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான உரிமை மக்களுக்கும் உள்ளதால் அவர்கள் தனக்கு விருப்பமானவருக்கு வாக்களிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க முற்படும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் எனவும் அவர்களை தவிர வேறு எவருக்கும் வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Back to top button