நுவரெலியாமலையகம்

ஸ்ரீ கதிரேசன் ஆலய வருடாந்த தைப்பூசப் பெருவிழா

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய வருடாந்த தைப்பூசப் பெருவிழா முத்தேர் பவனி இன்று  ஆலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கருவறையில் வீற்று இருக்கும் கதிரேச பெருமான் மற்றும் வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கின்ற கதிரேச பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய கதிரேச பெருமான் சித்தரத்தேரில் வீற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். மேலும் நாளைய தினம் தேர்பவனி நிறைவடையும்.

இவ் ஆலயத்தின் மகோற்சவம் கடந்த 12 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையும்.

இவ்விழாவிற்கு பூரண ஊடக அனுசரணை மலையகம் FM, malaiyagam.lk என்பன வழங்குகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button