செய்திகள்
ஸ்ரீ பாத யாத்திரைக் காலம் வரும் 17ஆம் திகதி நிறைவு !

இவ்வருட ஸ்ரீபாத யாத்திரைக் காலம் எதிர்வரும் 17ஆம் திகதி நிறைவடைவதாக ஸ்ரீபாத பீடாதிபதி வண. பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.நல்லதண்ணி பௌத்த நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீபாத யாத்திரைக் காலத்தின் முடிவு தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
17ஆம் திகதி நண்பகல் ஸ்ரீ பாத உடமலுவவில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளின் பின்னர் பெல்மடுல்ல கல்பொத்தாவல ரஜமஹா விகாரைக்கு சமன் தேவ சிலை மற்றும் நகைகள் எடுத்துச் செல்லப்படும்.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சம்பிரதாய சமய நிகழ்வுகள் இடம்பெறும் என வண.பெங்கமுவே தம்மதின்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.