மலையகம்

ஹட்டனிலிருந்து கண்டிக்கு சேவையில் ஈடுபடும் பேருந்து, மஸ்கெலியா நகர பேருந்துதரிப்பிடத்துக்கு வருவதில்லை : மக்கள் குற்றசாட்டு

இலங்கை போக்குவரத்துச் சபையின் ஹட்டனிலிருந்து, கண்டிக்கு சேவையில் ஈடுபடும் பேருந்து, மஸ்கெலியா நகர பேருந்துதரிப்பிடத்துக்கு வருவதில்லை என பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

அதிகாலை 4.30 மணிக்கு, சாமிமலை நகரிலிருந்து கண்டிக்கு பயணிக்கும் இந்த பேருந்து , காலை 8.45 மணியளவில் கண்டியைச் சென்றடைகின்றது எனவும் 9.45 மணியளவில் கண்டியில் இருந்து மீண்டும் நோட்டன் வழியாக சாமிமலை நகரை வந்தடைவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மீண்டும் சாமிமலை நகருக்கு வரும் பேருந்தானது, மஸ்கெலியா நகர பேருந்துதரிப்பிடத்துக்கு வருவதில்லை என, பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் அதிகாரிகளின் கவனம் செலுத்த வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button