...
செய்திகள்நுவரெலியாமலையகம்

ஹட்டனில் பேருந்து விபத்து; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

அட்டன் – சலங்கந்தை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியைவிட்டு 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சலங்கந்தை பேருந்து தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பில் அட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen