மலையகம்

ஹட்டனில் மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் மயிரிழையில்உயிர் தப்பிய குடும்பம் !!!!!!!…..

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் வில்ப்ரட் புரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு சுமார் 11 மணியளவில் மண் திட்டுடன் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததால் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தின் போது அவ்வீட்டில் 4பேர் உறங்கி கொண்டிருந்ததாகவும் அதிர்ஷ்ட வசமாக அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

மண்திட்டு சரிந்ததினால் வீட்டின் இரு அறைகள் மட்டும் பகுதியளவில் சேதமாகியுள்ளன.இச்சம்பவம் தொடர்பாக கிராமசேவகருக்கும் , பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார் .சமீப காலமாக மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் செய்தியாளர் .யது

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com