மலையகம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் மண்சரிவு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயநிலை காரணமாக அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செனன் பகுதியில் இன்று (17) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்ததுடன், பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பின.

இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 04.00 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள தேயிலை மேட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ,வீதியில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவ்வீதி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் அங்கு வந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த நிலை சீராகும் வரை சாரதிகள் தற்காலிகமாக கொழும்பு பழைய வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button