செய்திகள்நுவரெலியாமலையகம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து ஸ்தம்பிதம்.!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்ஹேன நகரத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த பகுதியுடனான போக்குவரத்து ஒரு வழிபாதையாக இடம்பெற்றிருந்தது.

மண்மேடுடன் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் பாரவூர்தி ஒன்றும் சேதமடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குறித்த பகுதியில் மண் அகற்றப்பட்டு வீதியுடனான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக கினிகத்ஹேன காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் கடற்பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download