அரசியல்நிகழ்வுகள்

ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு…

Inbox

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்வு இன்றைய தினம் (28) ஹட்டன் TVTC நிலையத்தில் இடம்பெற்றது.


 

இதன்போது மாணவர்களுக்கான  பல்வேறு விதமான புதிய  கற்கைநெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதைப் போல மோட்டார் வாகன திருத்தும் பணிகளை இன்றைய தினம் அமைச்சர் தலைமையிலேயே புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இங்கு உரையாற்றிய அமைச்சர், இந்த தொழிற்கல்வி நிறுவனங்களின் மூலம் கல்வி பயின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் சிறந்த ஒரு புத்திஜீவிகளாகவும் இருக்கின்றார்கள்.

இதை பல்வேறு விதத்திலே அபிவிருத்திகள் மேற்கொண்டு  இன்னும் தரமுயர்த்தப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இந்த மாணவர்களின் நலன் கருதி அதிநவீன  கணனி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபை தவிசாளர், சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபாகார்த்த மன்றத்தின் அதிகாரிகள் உட்பட இன்றைய தினம் புதிதாக கற்கை நெறிக்கு இணைத்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

CWC Media

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com