மலையகம்

ஹட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஹட்டனில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என போடப்பட்டிருந்த பெயர் பலகை இரு தினங்களுக்கு முன் அகற்றப்பட்டுள்ளது.இதனை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலர் ஹட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.மீண்டும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாகவே இந்த நிலையம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.இன்று காலை முன்னெடுக்கபட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையகத்தில் பல பாகங்களிலிருந்து பொதுமக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளின் தொழிற்பயிற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாக 1998ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பயிற்சி நிலையத்தை 2000ம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் ஊடாக திறந்து வைக்கப்பட்டது.மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவரால் ஜேர்மனி நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மூலமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி அமைக்கப்பட்ட இந்த தொழிற்பயிற்சி நிலையம் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானின் மறைவுக்கு பின் ஆறுமுகன் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.

அன்று முதல் இன்றைய நல்லாட்சி அரசாங்க காலம் வரை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாகவே இயங்கி வரும் இந்த நிலையம் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button