மலையகம்
ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று சிறிய பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்து!
நல்லதன்னி பிரதேசத்திலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று சிறிய பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்து இன்று மாலை 4 மணியளவில் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் எந்த நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் விபத்தில் பாரவூர்தி பாரிய சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பேருந்தின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என ஹட்டன் பொலிஸாரின் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவியவந்துள்ளது.