மலையகம்

ஹட்டன் போக்குவரத்து சபைக்கு ஐந்து புதிய பேருந்துகள் வழங்கி வைப்பு

இலங்கை போக்குவரத்து சபையினால் ஹட்டன் போக்குவரத்து சபைக்கு ஐந்து புதிய பேருந்துகள் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பேருந்துகள் நேற்று கொழும்பு நறேனபிட்ட பகுதியில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையில் வைத்து நிமால் ஸ்ரீபாலடி சில்வாவினால் வழங்கப்பட்டள்ளது.

இந்த ஐந்து பேருந்துகளும் ஹட்டன் போக்குவரத்து சபை முகாமையாளரிடம் கையயிக்கப்பட்டுள்ள நிலையில், ஹட்டன் டயகம சாமிமலை போடைஸ் தலவாக்கலை மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக ஹட்டன் போக்குவரத்து சபை முகாமையாளர் அனுர தெரிவித்துள்ளார்.

மேலும், ஐந்து பேருந்துகளும் நவீனமுறையில் தயாரிக்கபட்டுள்ளதுடன், ஹட்டன் போக்குவரத்து சபைக்கான பேருந்துகளை கையளிக்கபட்டமை குறிப்பிடதக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button