நிகழ்வுகள்மலையகம்

ஹட்டன் மல்லியப்பு தோட்ட ஆலயத்திற்கு சிலை அன்பளிப்பு..

ஹட்டன் மல்லியப்பு தோட்ட ஆலயத்திற்கு ஐம்பொன்னாலான பிள்ளையார் சிலை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

மல்லியப்பு தோட்ட ஆலய பரிபாலன சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் இணைந்தே இந்த பிள்ளையார் சிலையை ஆலயத்திற்கு பெற்றுக் கொடுத்தனர்.

ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் குறித்த சிலை ஆலய நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரிடமும் மல்லியப்பூதோட்ட ஆலய நிர்வாகத்தினர் சிலை தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர்.

அதனடிப்படையில் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக சிலை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப், பிரதேச சபை உறுப்பினர்களான சிவானந்தன், சிவனேசன், மஞ்சுளா, சசிகலா , ஹட்டன் நகர சபை உறுப்பினர் பாலா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராம், அமைப்பாளர் ராஜமாணிக்கம், சிவஞானம், ஐஸ்டின், விஜேவீரன், சிறிதரன், பிரதேச அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button