செய்திகள்

ஹட்டன் முதல் டிக்கோயா வரை பெற்றோலுக்கான நீண்ட வரிசை…

ஹட்டன் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைக்கிடையே பெற்றோல் விநியோகங்கள் இடம்பெற்ற போதிலும் இன்றைய (17) பெற்றோலுக்கான வரிசை நீண்டு கொண்டிருந்தன.
இன்று காலை ஹட்டன் எண்ணை நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றன.
காலை முதல் நீண்ட பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதனை காணக்கூடியதாக இருந்தது.

ஒரு பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இரண்டு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூர வாகனங்கள் வரிசை காணப்பட்டன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஹட்டன் எம்,ஆர் டவுன் பெற்றோல் நிலையத்தில் இன்று காலை சுமார் 6500 லீற்றர் பெற்றோல் வந்தடைந்ததனை தொடர்ந்து குறித்த பெற்றோல் நிலையத்திலிருந்து டிக்கோயா வரை சுமார் இரண்டு கீலொமீற்றருக்கும் அப்பால் வாகனங்களில் பெற்றோலை பெறுவதற்கு காத்திருந்தனர்.

ஒரு சிலர் வாகனங்களில் பெற்றோல் நிரப்புவதற்கு உள்ள (டேங்க்) கொள்களன்களையும் கழற்றிக்கொண்டு வந்து பெற்றோல் நிரப்புவதனை காணக்கூடியதாக இருந்தன.

இதே வேளை எண்ணை நிரப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவே பெற்றோல் விநியோகம் இடம்பெற்றன.

Related Articles

Back to top button