நுவரெலியா

ஹனுமான் பாதங்கள் ஆராய்ச்சியில் ?

 

மஸ்கெலியா, காட்மோர் பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை, கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் அதிகாரிகள், இன்று (23) ஆய்வுக்கு உட்டுப்படுத்தினர்.

மேற்படி நிலையத்தின் ஆய்வாளரான பாலித அத்தநாயக்க தலைமையிலான குழுவினரே, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி அதிகாரிகள், பாதச்சுவடுகளைப் படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு செய்தனர்.

இந்தப் பாதச்சுவடுகள் தொடர்பாக உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்குச் சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின்னர், முழுமையான அறிக்கையொன்றைப் பெற்றுத் தருவதாகவும், ஆய்வாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

எவ்வாறான போதிலும், இந்தப் பாதங்கள் ஹனுமான் கடவுளின் பாதச்சுவடுகள் எனத் தெரிவித்து, பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, பிரதேசவாசி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 1ஆம் திகதி எனது கனவில் ஹனுமார் தோன்றி, இந்தப் பிரதேசத்தில் உறைந்துள்ளதாகத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து குருக்களிடம்கூறி, இந்தப் பிரதேசத்தில் தேடுதலை மேற்கொண்டோம். இதன்போதே, பாறைகளுக்கு இடையில் பாதச்சுவடுகள் இருப்பதைக் கண்டறிந்தோம். இது நிச்சியமாக ஹனுமான் சுவாமியின் பாதச்சுவடுகளே” என்று கூறினார்.

நன்றி- தமிழ்மிரர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button