சினிமா

ஹன்சிகாவின் இந்த போஸ்டரும் சர்ச்சையை ஏற்படுத்துமா?

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னதாக வெளிவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களே பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.

அந்தவகையில் ஹன்சிகா நடித்துள்ள மகா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது அதில் ஹன்சிகா காசி ஆலயத்தில் பின்னணியில் அமர்ந்து புகைபிடிப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது.

அந்தத் திரைப்படத்தின் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தது அதனால் அந்த காட்சியை அந்த படத்தில் இருந்து நீக்குவதாக அப்படத்தின் இயக்குனர் jameel தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது போஸ்டரில் முஸ்லிம் பெண் வேடத்தில் ஹன்சிகா கடவுளை வணங்குவது போல் காட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் பின்பகுதியில் பள்ளிவாசல் ஒன்று காணப்படுவதுடன் அதற்கு மேலாக வெள்ளைப் புறாக்கள் பறக்கின்ற அதேநேரம் ஹன்சிகா கடவுளை வழங்குவதுபோல காட்டப்பட்டுள்ளது எனினும் ஹன்சிகாவின் நிழல் துப்பாக்கி ஒன்றினால் தன்னைத்தானே சுட்டுக் கொள்வது போல காணப்படுகின்றது. பலதரப்பட்ட விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது

Related Articles

33 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button