செய்திகள்

ஹபரணை- ஹிருவடுன்ன பகுதியில் நான்கு யானைகள், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

ஹிருவடுன்ன காட்டுப்பகுதியில் குறித்த யானைகள் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக வனஜீவராசி அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற அதரிகாரிகள், இன்று முற்பகல் யானைகளின் சடலங்களை  அகற்றியுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்துள்ள யானைகளில் ஒரு யானை கர்ப்பமுற்ற நிலையில் காணப்பட்டதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த யானைகள் யாராலும் கொலை செய்யப்பட்டிருக்கலாமென வனஜீவராசி அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சிகிரியா வனஜீவராசி அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download