செய்திகள்

ஹபரனை சம்பவம் : விசாரணைக்கு இருவர் அடங்கிய குழு நியமனம்.!

இராணுவ சேவையிலிருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைமை வலுவடைந்ததன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளமையாலும் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விசாரணைகளுக்கு அவசியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்பான அறிக்கை விரைவில் இராணுவ தளபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button