ஹப்புத்தலையில் மான் தோலுடன் ஒருவர் இன்று (27/01) கைது செய்யப்பட்டுள்ளார் .
ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரத்ன அவர்களுக்கு கிடைத்த இரகசியதகவல்படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஹப்புத்தளை, பொரலந்த – பிட்டபொல பகுதியில் 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரிடமிருந்து மான் ஒன்றினுடைய தோலையும் சிறிய ரக துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்