செய்திகள்பதுளைமலையகம்

ஹப்புத்தளையில் விபத்து -வாகன சாரதி வைத்தியசாலையில் அனுமதி!

அப்புத்தளை பெரகல பிரதான வீதியில் மேல் வியரகல பகுதியில் இன்று அதிகாலை 1:30 மணி அளவில் கனரக வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் 500அடி பள்ளத்தில் விழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி காயங்களுடன் 1990 வண்டி மூலம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று அதிகாலை மேல் வியரகல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த இடத்தில் இரண்டு வாகனம் மோதியதாகவும் மற்ற வாகனம் நிறுத்தாமல் சென்று விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button