செய்திகள்

ஹரினின் கைது தொடர்பில் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ செப்டம்பர் முதலாம் திகதி வரை கைதுசெய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தார்.

ஹரீன் பெர்னாண்டோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் இதனை அறிவித்துள்ளார்.

தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவுக்குக்கான தடை உத்தரவு இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் அவரைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனையடுத்து, ஏப்ரல் இறுதியில் அடிப்படை உரிமை மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button