அரசியல்செய்திகள்

ஹர்ஷவும் பதவி துறந்தார்.

அமைச்சரவை அந்தஸ்த்தற்ற பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி விரும்பிய தகுந்த ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு, உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதமொன்றை அனுப்பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தின் ஊடாக, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளார்.

1990 சுவசெரிய மன்றத்தை ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, அந்த சேவையை பலப்படுத்துமாறு கோரியுள்னார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஏற்கனவே 8 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

சம்பிக்க ரணவக்க, அசோக் அபேசிங்க, மங்கள சமரவீர, கபிர் ஹாசீம், மலிக் சமரவிக்ரம, ருவன் விஜயவர்தன, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download