செய்திகள்

ஹல்தமுல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த சிறுமிக்கு கோவிட் தொற்று ..

பலாங்கொடையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சார்ந்த 13 பேர் ஹல்தமுல்ல பிரதேசத்தில் கடந்த 03ம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பத்தில் காயமடைந்த 03 வயது சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி .ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பலாங்கொடை கொ-ரஙாமட பிரதேசத்தில் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று நேற்று உறுதியானதை அடுத்து அவர்களுடன் முதற் கட்ட தொடர்புடையவர்கள் சுய பாதுகாப்பு தனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு.

அவர்களுக்கான பி .சி. ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச சுகாதார பிரிவின் உயர் அதிகாரி வைத்தியர் நூர்தீன் ரபாய்தீன் தெரிவித்தார்.

அத்தோடு நேற்றைய தினம் பலாங்கொடை பொலிஸார் பலாங்கொடை நகரில் திடிர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்டிஜன் பரிசோதனை நடத்தவுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை பலாங்கொடை சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும் நோக்கில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பலாங்கொடையில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்படும் என்று பலாங்கொடை அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொஹமட் அலி

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com