செய்திகள்மலையகம்

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு மகஜர்..

செல்லி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஹட்டன் மெதஸ்டிக் சிறுவர் இல்லத்தின் சிறுவர்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக நேற்று (25) மாலை கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டனர்.

´கல்வி கற்பது எங்களின் உரிமை´ என எதிர்கால தலைவர்கள் நாங்கள் என்று ஏன் எங்கள் வாழ்க்கையை சீரழிக்கீறீர்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகர் என்ற போது ஏன் இந்த ஏற்றத்தாழ்வு´ போன்ற வாசகம் எழுதிய பதாதைகளை காட்சி படுத்தி கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

குறித்த நடவடிக்கை டன்பார் வீதியில் ஹட்டன் ஹைலன் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்றது. இதன் போது இவர்கள் வீதியில் செல்பவர்களிடம் கையெத்துக்களை பெற்றனர்.

இது குறித்த இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள சிறுவர்கள் கருத்து தெரிவிக்கையில், மலையத்தில் உள்ள சிறுவர்களை கல்வியில் ஈடுபடுத்தாது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி சிறுவர்ளை துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். அண்மையில் இடம்பெற்ற ஹிசாலினியின் சம்பவம் அவ்வாறான ஒன்று அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது நிறுத்த கோரி நாங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பவதற்கு கையெழுத்து பெற்று வருகிறோம் அத்தோடு ஹிசாலினக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி தமிழ் தெரண

Related Articles

Back to top button
image download