சமூகம்

ஹிசாலினியின் மீள் பிரேத பரிசோதனைக்காக மூவரடங்கிய வைத்திய நிபுணர்கள் குழாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகமயைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் உடலை தோண்டி எடுத்து மீள பிரேத பரிசோதனை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பிரேத பரிசோதனையை மேற்கொள்ள மூவரடங்கிய வைத்திய நிபுணர்கள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த குழாமில் பேராசிரியர் ஜீன் பெரேரா, வைத்தியர் சமீர குணவர்தன மற்றும் வைத்தியர் பிரபாத் சேனசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ள பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் சரீரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.AddThis Sharing Buttons

Related Articles

Back to top button