செய்திகள்

ஹிஷாலினியின் ஆத்மசாந்திக்காக பிராத்தனையில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்..

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதூர்தீன்  இல்லத்தில் பணியாற்றிய டயகமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 17ம் திகதி மரணமடைந்த நிலையில் இன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் டயகம பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருந்தார்.

இதன் போது அமைச்சர் அவரின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்தியேற்றிவைத்ததோடு மலையக உறவுகளும் தத்தமது இல்லங்களில் மெழுகுவர்த்தியேற்றி ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாரறு கேட்டுக்கொண்டார்.  

இதேவேலை மலையகத்தில் பல இடங்களிலும் மெழுகுவர்த்தியெற்றி ஏற்றி இஹிஷாலியின் ஆத்ம சாந்திக்காக பிறாத்தித்தனர்.


இந்நிகழ்வில்  இ.தொ.காவின் உப தலைவர் சத்திவேல், அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்செல்வன் ,கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமனி பிரசாத் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர் .

Related Articles

Back to top button