செய்திகள்

ஹிஷாலினியின் மரணத்திற்கு சம்பந்தமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும்வரை போராட்டங்கள் தொடரும் – ரூபன் பெருமாள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரியும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் ஏற்பாட்டில் இரத்தினபுரி நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (01/08) இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டமானது இரத்தினபுரி உதவும் கரங்கள், இரத்தினபுரி தமிழ் மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம், முத்தமிழ் நற்பணி மன்றம், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் தோட்ட தலைவர்கள் மற்றும் இரத்தினபுரி நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பல தோட்டங்களில் இருந்து பெருந்தோட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

இதன்போது சிறுவர்கள் விடயத்தில் மலையக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button