நுவரெலியாமலையகம்விளையாட்டு

ஹென்போல்ட் தீபம் கழகம் நடத்திய திகா – உதயா வெற்றிக் கிண்ணத்தை நானுஓயா கேஜிஓ அணி வென்றது !

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் பிறந்த தினம் மற்றும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் அனுசரணையில் ஹென்போல்ட் தீபம் விளையாட்டுக் கழகம் நடத்திய திகா -உதயா மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நானுஓயா கேஜிஓ அணி செம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டது.

இரண்டாம் இடத்தை சிஜிஓ அணியினரும் முன்றாம் இடத்தை ஸ்டார் லைன்ஸ் அணியினரும் வெற்றிகொண்டனர்.

பொங்கல் தினத்திற்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த மென்பந்து கிரிக்கெட் போட்டி மூன்று நாட்களாக நடத்தப்பட்டது. சுமார் 30ற்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் பங்குபற்றின.

வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன் சிறந்த வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

தீபம் விளையாட்டுக் கழக இளைஞர்களுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச அமைப்பாளர் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button