ஹென்போல்ட் தோட்டத்தில் 15 வருடங்களுக்கு பிறகு நேற்று ராமாயண நாடகம்…

ஹென்போல்ட் தோட்டத்தில் நேற்று (13/01.2019) ராமாயணம் நாடகம் இடம் பெற்றது.
குறித்த நாடகத்தை நாடக ஆசிரியர் நல்லு அவர்கள் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒழுங்கமைத்து மேடை ஏற்றி இருந்தார்.

குறித்த ராமாயண நாடகத்தை பார்க்க தோட்ட இளைஞர்கள் மற்றும் தோட்டமக்கள் பெருந்திரளாக கூடி இருந்து மகிழ்ந்தனர்.

தொலைக்காட்சிகள் மலையகத்தில் வியாபிக்க ஆரம்பிக்கும் முன்பு இதிகாச கதைகளை நாடக கலைஞர்கள் மேடை ஏற்றி தோட்டங்களில் நடித்து வந்தனர். எனினும் காலப்போக்கில் பல காரணங்களால் மலையக கலைகள் அழிய தொடங்கின மேலும் நாடக கலைஞர்கள் மௌனமாக்கப்பட்டார்கள்.

எனினும் மலையகத்துக்கே உரித்தான கலைகள் அழிந்து வரும் இந்த காலகட்டத்தில் இந்த நாடக கலையை மேடை ஏற்ற உழைத்த நாடக மாஸ்டர் உட்பட அங்குள்ளவர்களுக்கும் பாராட்டுகளை மலையகம் .lk தெரிவித்துக்கொள்கிறது.
