...
செய்திகள்

ஹெய்ட்டி எரிபொருள் டேங்கர் வெடிப்பு ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஹெய்ட்டியில் கடந்த வாரம் எரிபொருள் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.

வெடிப்பினால் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இன்னும் ஆபத்தான கட்டத்தில் உள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

டிசம்பர் 14 ஆம் திகதி அதிகாலையில் எரிபொருளுடன் பயணித்த குறித்த வாகனமானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் பிறகு எரிபொருள் டேங்கரில் இருந்து வெளியேறிய எரிவாயுவினை சேமிப்பதற்காக குடியிருப்பாளர்கள் டேங்கரை நோக்கி விரைந்தனர்.

இந் நிலையிலேயே டேங்கர் தீப்பிடித்து வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதனால் அருகாமையில் இருந்த வாகனங்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen