உலகம்செய்திகள்

ஹெய்ட்டி ஜனாதிபதியின் படுகொலையுடன் தொடர்புடைய நால்வர் சுட்டுக்கொலை

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸின் படுகொலையுடன் தொடர்புடைய நால்வர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேரை கைது செய்துள்ளனர்.

ஹெய்ட்டி தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸில் உள்ள ஜனாதிபதியின் வீட்டிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் இடைக்கால பிரதமர் க்லோட் ஜோசப் அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் போது காயமடைந்த ஜனாதிபதியின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கொலை செய்யப்பட்டதால் ஹெய்ட்டியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாட்டை ஸ்திரநிலையில் முன்னெடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் க்லோட் ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதியின் படுகொலையானது மனித தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஜொவெனெல் மொய்ஸின் பதவிக் காலம் முடிவடைந்திருந்த நிலையில், மேலும் ஒரு வருடத்திற்கு பதவியை நீடிப்பதாக அவர் அறிவித்திருந்தார். அத்துடன், மொய்ஸிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறைக்கேடுகள் காரணமாக நாடு பூராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத குழு ஒன்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button