செய்திகள்

ஹெரொயினுடன் பெண்ணொருவர் கைது.

பொரளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 380 ஹெரோயின்
பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 11.30 மணியளவில் அவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஹெரோயின் பாக்கெட்டுகளினுள் 15 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின்
போதைப்பொருள் இருந்ததமை கண்டறியப்பட்டுள்ளது.

38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download