செய்திகள்

ஹெரோயின் கடத்தல் குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை..

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளங் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பொரளை பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதான குற்றவாளிக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

13 தசம் 2 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகியதையடுத்து,கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய, மரண தண்டனை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் 2016 ஆம் ஆண்டு பொரளை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related Articles

Back to top button