செய்திகள்

ஹெரோயின் கடத்தல் தொடர்பில் வெளியானது தகவல்.

214 கிலோகிராம் ஹெரோயின் தொகை நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

சந்தேகநபர்களின் தொலைபேசி கலந்துரையாடல்களை ஆராய்ந்ததில், இந்த இது குறித்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிலிருந்து ஹெரோயின் தொகை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான், டுபாய், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலுள்ள கடத்தல்கார்களால் ஹெரோயின் கடத்தல் இடம்பெற்றுள்ளது.

214 கிலோகிராம் ஹெரோயினுடன், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹெரோயினுடன் 5 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related Articles

Back to top button