உலகம்செய்திகள்

ஹெரோயின் குற்றச்சாட்டு – ஆறு இந்திய மீனவர்களும் விடுதலை…

ஹெரோய்ன் கடத்தல் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 06 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று தீர்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இந்திய மீனவர்களையும் , நீதிபதி விடுவித்து விடுதலை செய்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்பிராந்தியித்தில் சுமார் 08 கிலோகிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இந்திய மீவர்கள் 06 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் காரைக்கால் பகுதியை சேர்ந்த 06 மீனவர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பான விசாரணையில் காணப்பட்ட தாமதம் மற்றும் நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைப்பாடுகள் காணரமாக, மீனவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.

இதன் காரணமாக ஆறு இந்திய மீனவர்களையும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து இன்று உத்தரவிட்டார்.

வௌிநாட்டலுவல்கள் அமைச்சு, மற்றும் உரிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஆறு இந்திய மீனவர்களையும் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download