மலையகம்

ஹெரோ தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டி ஒன்று கண்டுபிடிப்பு

பூண்டுலோயா – ஹெரோ தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டி ஒன்று அடையாளங்காணப்பட்டுள்ளது.

குறித்த நேற்று காலை 7.30 மணியளவில் தேயிலை மலைக்கு சென்ற தோட்டத்தொழிலாளர்கள் பாதையோரத்தில் கிடந்த சிறுத்தை குட்டியொன்றை இணங்கண்டுள்ளனர்.

கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டி அடிப்பட்ட நிலையில் இறந்து காணப்பட்டுள்ளது.உடனே குறித்த தொழிலாளர்கள் தோட்ட கங்காணியின் ஊடாக பூண்டுலோயா பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தன் பின்னர் சம்பவமிடத்துக்கு பொலிஸார் சென்று சிறுத்தை குட்டியை கொண்டு சென்றுள்ளனர்.

முதல் முறையாக சிறுத்தைக்குட்டியை கண்டுள்ளதால் ஹெரோ தோட்ட மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

இணங்காணப்பட்ட சிறுத்தை குட்டி என்பதால் இன்னும் பல சிறுத்தைகள் தேயிலை மலையில் காணப்படும் என்ற அச்சம் காணப்படுவதாகவும் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button