செய்திகள்

ஹேமசிறி பெர்ணான்டோ 03 மணித்தியாலங்கள் விசாரணை..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, நேற்றைய தினம் சுமார் 8 மணித்தியாலங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர், நேற்று முற்பகல் 9.30 அளவில் சிறைச்சாலை அதிகாரிகளால் கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

மக்கள் வங்கியின் தலைவராக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை சாட்சியமளித்திருந்தார்.

இதனையடுத்து, ஆணைக்குழு முன்னிலையில் மேலும் 5 மணித்தியாலங்கள் வரை சாட்சியளித்ததை தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download